Skip to main content

சேவை என்ற பெயரில் நூதன திருட்டு

Divya Senthamil Selvan - Buzz - Public - Muted
*சேவை என்ற பெயரில் நூதன திருட்டு*
---------------------------------------------------

"வணக்கம். நாங்க XXX டிரஸ்ட்-ல இருந்து அழைக்கிறோம். எங்களிடம் 45 குழந்தைகள் இருக்காங்க. அவர்களுக்கு படிக்க புத்தகமோ அல்லது உணவிற்கு ஏற்பாடோ செய்ய உங்களால் முடிந்த தொகையை எங்களுக்கு அனுப்பலாமே"
- இதே வசனத்தை அங்கே இங்கே சிறிது மாற்றி, மூன்றிற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஒரு வாரத்தில் அழைத்து விட்டார்கள்..

நான் சொன்ன விஷயம் இது மட்டும் தான். "உங்களது டிரஸ்ட் கொண்டுள்ள குழந்தைகளை நாங்கள் பார்க்க நேரிட்டால் இன்னும் பெரிய அளவில் உதவிகள் ஏற்பாடு செய்ய முடியும். உங்களது முகவரியை தாங்க.."

"உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புறோம் , இதோ SMS அனுப்புறோம்" என்று மழுப்பி வைத்து விட்டார்கள்.. ஒருவர் கூட சரியான தகவலை எனக்கு அளிக்கவில்லை..

என்னடா இவங்களுக்கு இன்னும் உதவி செய்யலாம்னு நினைச்சாலும் அவங்க முன்வரவில்லையே என்று எனக்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது.. கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்த துறையில் கிடைத்த உறவுகளை வைத்து என்னால் இன்னும் உதவ முடியும் என்று நினைத்தே அப்படி கேட்டேன்

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழிலில் இருக்கும் வேறு சில நண்பர்களுக்கும் இது போன்ற அழைப்பு வந்து இருக்கிறது..

Corporate dump எடுத்து இது போல அழைப்பதாக எனக்கு தோன்றுகிறது..
இன்று மீண்டும் ஒரு முறை அழைப்பு வந்தது.. விடாமல் முகவரி கேட்ட போது கொடுத்த முகவரி
courtesy home
morai main road
vel tech engg college
veerapuram
avadi
கூகிள்-ல் தேடி பார்த்தால் அப்படி ஒரு இல்லமே இல்லை.. உங்களது அலைபேசி எண் கொடுங்கள் என கேட்டதற்கு,
உங்களுக்கு வலைத்தளம் தருகிறோம், சனிக்கிழமை அழைக்கிறேன் என்ற மழுப்பலே வந்தது.. கடைசியில் இப்போ உடனே தாங்க நாளைக்கே வரோம் என்று சொன்ன போது தொடர்பு துண்டித்தாகி விட்டது..


*எனது இரண்டு செண்டுகள்* :
------------------------------------------------

Pankhudi யில் நான் முழு மூச்சாக வேலை செய்திருந்த நாட்களில், எனது அனுபவங்களை எழுதி நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதுண்டு.. (எனக்கே ஒரு நம்பிக்கையை அது தந்ததால்), இரண்டு மாதம் மட்டும் பழகிய ஆந்திராவில் இருக்கும் ஒரு நண்பன் அடுத்த நாள் 5000 எனக்கு அனுப்பி, "உனக்கு தெரிந்த ஏதாவது நல்ல விதத்தில் செலவு செய்.. என்ன செய்தாய் என்று எனக்கு நீ சொல்லவே வேண்டாம்".. என்று ஒரு குறிப்புடன் அனுப்பி இருந்தான்.. வேறு ஒரு தருணத்தில், எனது அனுபவத்தை(Orkut Scrapbook - ல் ) பற்றி படித்த ஒருவன் , மைசூரில் இருக்கும் அவனது தோழியை அழைத்து அவளை நிர்பந்தித்து அவள் எனக்கு 3000 அனுப்பி வைத்தாள்.

நாங்கள் செய்து வந்திருந்த வேலைக்கு (பெரும்பாலும் ஆசிரமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து வந்தோம் ) பெரும்பாலும் funds தேவைப்பட வில்லை .. அப்படியே இருந்தாலும் நாங்களே புரட்டி கொண்டோம்.. நானே தலை எடுத்து , அ முதல் ன வரை செய்த ஒரு பெரிய விழாவிற்கு ஆன மொத்த செலவு 15 ஆயிரம் ரூபாய்.. அதற்க்கு பிறகு அவ்வளவு விமரிசையாக எதுவும் செய்ய வில்லை.. ஆயிரம் ரூபாய்க்குள் அடங்கி விடும் செலவுகள் தான் இருந்தது .. அதையும் நாங்களே சமாளித்தோம்..

எனது நடவடிக்கை தெரிந்த சில நண்பர்கள், தங்கள் பிறந்த நாளுக்கோ, விசேஷதிற்கோ நன்கொடை அளிக்க விரும்புவதாகவும், உண்மையில் தேவை இருக்கும் சில ஆசிரமங்களை பற்றி கேட்பதுண்டு..

இது போன்ற தகவல்களுக்கு நான் அதை பற்றி நன்கு தெரிந்த நண்பர்கள் பற்றி சொல்லி அவர்களிடம் கேட்குமாறு சொல்லி விடுவேன்..
எந்த அறிவியல் விழாவிற்கும் அப்பா, உனது நண்பர்களிடம் இருந்து கொஞ்சம் நிதி திரட்டி விழாவிற்கு அளிக்க சொல் என்று சொல்லுவார் ..
10 நாள் விடுதி எடுத்து கூட வேலை செய்கிறேன்.. நிதி மட்டும் கேட்க முடியாது என்று சொல்லி விடுவேன்.. எனக்கு அது பெரிய சங்கடமாக இருக்கும்.. சிலர் அவர்களாகவே முன் வந்து தந்தாலும் அது தேவையானவர்களுக்கு தாமாகவே கொடுக்க சொல்லி விடுவேன்.. நடுவில் இருந்து வாங்கி மற்றவருக்கு கொடுப்பதில் பெரிய பொறுப்பு இருக்கிறது.. அது கொடுத்தவருக்கு சரியான கணக்கு கொடுப்பதில் இருந்து, சரியான நிறுவனம் தேர்ந்தெடுத்து, பாதுகாப்பாக அளிப்பது வரை..

அறிவியல் இயக்கத்தின் மாநாட்டிற்கு, குழந்தைகள் அறிவியல் விழாக்களுக்கும், கலை இரவுகள் நடக்கும் சமயம் தொழில் துண்டு போட்டு உண்டியல் குலுக்கி நிதி திரட்டி இருக்கோம் ..

நாம இத்தனை வருடம் field - ல் இருந்தே இத்தனை தயங்குகிறோம்.. இவர்களுக்கு என்ன தைரியம் பாருங்கள்.. அதுவும் ஏமாற்றுவதற்கு

மிக நம்பிக்கையாக, ஒரு பிழை இல்லாமல், ஒப்பிக்கிறார்கள் இந்த தொலைபேசியில் அழைப்பவர்கள் ..
ஒன்று முடியாது என்ற பதில் (இல்லை) முகவரி கொடுக்க போகிறார்கள்.. இதை சமாளிக்க தெரிந்து வைத்து இருப்பார்கள்..
ஆனால் அந்த ஆசிரம முகவரி அல்லது அவர்களது அலைபேசியை கேட்டால் அதிர்ச்சி அடைகிறார்கள்.. (அவர்கள் அழைக்கும் எண் மீண்டும் அழைக்க முடியவில்லை)

நூதன முறையில், குழந்தைகள் பெயரை சொல்லி இது போல் ஏமாற்றுபவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாகவே இருங்கள்..
இவர்களது முக்கிய இலக்கு - தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களாகவே இருக்கிறது.. (இது எனது அனுமானம்)

முடிந்த வரை பகிர்ந்து மற்றவர்களுக்கும் இதை தெரிவியுங்கள் ..

Popular posts from this blog

MY FRIEND'S BEST JOB

I received a sms today from +91 8468933160 stating like this
My Name is Mrs Emily Nathan. I want to transfer $5.5m Dollars to you for the poor one's in your country india contact me here : mrsemillynathan@outlook.com
So i have replied back saying that
"am busy now. And on my behalf the Commission of Police will take care of you and the process 😊☺"
So my dear folks better be careful and beware on this type of messages or call...
#beware#smsfraud#becareful#fraud#ஜாக்கிரதை#உங்கள்கவனத்திற்கு

Talk soon

With due respect,

This should be my 3rd email message to you.I do not know if am on with siva kumar, I believe I got the info right this time.

If really I did, Kindly let me know how to contact you properly?I would love to call you if the need should arise for more clarification.

Please let me know how it goes.It is very Important!

Talk soon,

Ruth Gonzalez
Ruth Gonzalez Ascociados
Madrid,España.

Site Map