ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கலைமகள்சபா என்ற நிறுவனம் துவங்கப்பட்டது. இந் நிறுவனத்தின் நிர்வாகிகள்பொதுமக்களிடம் பெருமளவு நிதி வசூல் செய்து பல இடங்களில் முதலீடு செய்தனர். பரிசுப் பொருட்கள், இனாம் மற்றும் கல்வி, திருமணம் ஆகியவற்றிற்கு நிதி உதவிஅளிப்பதாக பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தனர். ஆனால் சில நாட்களில் பலகோடி ரூபாய் ரொக்கத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. கலைமகள் சபா மீது உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சொத்துக்களை ஏலம் விட்டு பணம் செலுத்திய அனைவருக்கும் பிரித்துக்கொடுக்க அரசு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கு தனி அதிகாரியாகமகதும்ஷா நியமிக்கப்பட்டார். இணை இயக்குநர்களாக நவநீதகிருஷ்ணன் மற்றும்சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
Read more at: https://tamil.oneindia.com/news/2000/10/29/kalaimagal-sabha.html
இவர்கள் செய்தது நூதனமான மோசடி. முதலீட்டு நிறுவணம்போல அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டதால் மோசடி என சட்டப்படி நிரூபிப்பது கடிணம். அதனால்தான் இவர்கள் பிரச்சனை நடக்கும்போதே இவர்களை பின்பற்றி தேக்குமரக்காடு, செம்மரக்காடு, என பல கூட்டுறவு நிதி மோசடி நிறுவணங்கள் வந்தன. ஈமு கோழிப்பண்ணை என ஒருபடி மேலேபோய் விற்பனை வாய்ப்பே இல்லாத ஈமு கோழி மற்றும் அதன் முட்டைக்கு பொய்யான விற்பனையை நடத்தி விற்பனை வாய்ப்பு பெரிதாக இருப்பதாய் ஏமாற்றி பலரை போண்டி ஆக்கினார்கள்.
கலைமகள் சபாவினர் கூட்டுறவு முறைப்படி உறுப்பினர்களை பங்குதாரர்களாக்கி அவர்களது பங்கை நிலத்தில் முதலீடாக்கினார்கள். அது ரியல் எஸ்டேட் சூடுபிடித்திருந்த காலம் என்பதால் பலரும் நிலத்தில் போடும் முதலீடு என்பதால் நிச்சயம் நல்லவிலைக்குபோய் அவர்கள் கூறியதுபோல நல்ல வரவை தரும் என நம்பி இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்து பங்குபணம் கொடுத்தனர். இவர்கள் குறைந்தவிலை இடங்களை ஏக்கர்கணக்கில் அடிமாட்டு விலைக்கு விலைபேசிவாங்கி ஓரளவு கூடுதல் விலைக்கு வாங்கியதுபோல காட்டியதாக பலர் கூறுகிறார்கள். இன்னும் தனக்கு வேண்டியவர்கள் பெயரில் முதலில் பதிந்து பின்னர் அவரிடமிருந்து சிறிது அதிக விலைக்கு நிறுவணம் வாங்கியதுபோல செய்ததாகவும் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் கூறுகிறார்கள் அந்தப்பணத்தை விளம்பரத்திற்காகவும் உறுப்பினர்களுக்கு ஏஜண்டுகளுக்கு என தண்ணீராக செலவழித்து அவர்களை ஏமாற்றியதோடு, அலுவலக வேலைகளில் எல்லாம் தங்கள் உறவினர்களை அமர்த்தி சம்பளம் என்றபெயரில் பல இலட்சங்களை கொடுத்துள்ளார்கள். வாங்கிய இடங்களில் முக்கால்வாசி இடங்கள் விலை ஏறவே இல்லை. ஒருகட்டத்தில் முன்புபோல உறுப்பினர்களுக்கு கட்டிய பணத்திற்கேற்ற வட்டியளவுகூட பணத்தை இலாபத்துடன் திருப்பித்தரமுடியாதநிலை வரவே மோசடிவழக்கு பதிவாகி சில ஆண்டுகள்பின் இடத்தைவிற்று பணத்தை உறுப்பினர்களுக்கு திருப்பிக் கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டபடி செய்தாலும், இருபது வருடங்களாகியும் எழுபது என்பது சதம்பேருக்கு பணம் திரும்பக் கிடைக்காததால் மீண்டும் நீதிமன்றம் தற்போது அரசிடம் ஒரு உயர் அலுவலரை நியமிக்கவும் அவரிடம் நிர்வாகத்தின் பொறுப்பை ஒப்படைக்கவும் சொல்லி உள்ளது. உறுப்பினர் அனைவர்பெயரிலும் அவர்கள் பங்குக்கு நிலம் இருக்கிறது அது விற்பனையாகி பணம் திருபம்பக் கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறி.
Comments
Post a Comment